thiruma.web.tv

thiruma.web.tv

Saturday, 17 May 2014

அன்று புரட்சியாளர்அம்பேத்கர், இன்று தியாகத்தலைவன் திருமாவளவன்















அன்று புரட்சியாளர் அம்பேத்கர்,             
இன்று தியாகத்தலைவன் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகளே!
இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை..

கடமையை உணர்ந்து
எழுச்சிகொண்டு களப் பணியாற்றுவோம்.!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

உழைப்பாலும், உயிர்த்தியாகத்தாலும் கட்டியெழுப்பப் பட்டது.
விலை கொடுக்காதவர்களின் வெட்டிப்பேச்சைஎட்டி உதைப்போம்.!

 ஓய்வறியா தியாகத் தலைவன் திருமாவளவன்
விதைத்த விதை வீறுகொண்டெழும் என்பதை களமாடி நிருபிப்போம்?

தற்போதைய நிலையில்
 தனிமனித ஆற்றல் மட்டுமே மிக முக்கியமானது.

தேர்தல் களத்தில் தனிமனித பங்களிப்பு பெருமளவில் இல்லாததை     
 பகிரங்கமாக நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நடந்தது முடிந்தவையாக இருக்கட்டும்.
நடப்பது எல்லையில்லா எழுச்சியாக தொடரட்டும்...

எதற்கும் உதவாத புல்லுருவிகள் நமக்கு எதிரான களத்தில்,
பொதுவாதி என்ற பெயரில் சாதிவெறியர்கள் நமக்கு எதிரான தளத்தில்,
தலித்துகளின் விடுதலையை விரும்பாத மக்களோடு கள்ள உறவில் ,

இத்தகைய சாபக்கேடுகளின் பக்கம்
சத்தமில்லாமல்சாய்ந்து விடுகிற சாமானிய மக்கள்.



 இந்த சிக்கலான சமூகத்தில்
ஆண்டாண்டு காலாமாக
மூன்று வேளை உணவிற்கும்,
இருப்பிடத்திற்கும் மட்டுமே போராடிக்கொண்டிருக்கிற நாதியற்ற இந்த ஏழை எளிய மக்கள்..எப்படி வெல்லப்போகிறோம்
ஏதுமில்லாமல்?

நவீன காலத்திலும் எந்த தொடர்பும் இல்லாதவர்களை?
வயிற்று பிழைப்பிற்கே வழியில்லாத
சமூகத்தை எப்படி வலிமைப்படுத்த போகிறோம்.?

புற முதுகில் குத்துபவர்களை புறந்தள்ளிவிட்டு,
நம்மை எள்ளி நகையாடுபவர்களை அள்ளி துடைத்தெறிந்து விட்டு ஒவ்வொரு சிறுத்தையும் தனிமனித ஆற்றலை வெளிப்படுத்துவோம்..!

திருமா என்கிற தனிமனித ஆற்றல்தான் நம்மைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் நாவை அசையச் செய்தது.

அன்று புரட்சியாளர் அம்பேத்கர்,
இன்று தியாகத்தலைவன் திருமாவளவன்,

காலமில்லை.
கடமையை உணர்ந்து களப் பணியாற்றுவோம்.! அர்ப்பணிப்போம்..!

Wednesday, 14 May 2014

சூன் 15 – சென்னையில்,விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா – தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

Photo: 2014ஆம் ஆண்டுக்கான விருதுகள் பின்வருமாறு சான்றோர்களுக்கு அளிக்கப்படுகிறது:

அம்பேத்கர் சுடர் - தோழர் ஆர்.நல்லக்கண்ணு

பெரியார் ஒளி - திருவாரூர் தங்கராசு (மறைவு)

அயோத்திதாசர் ஆதவன் - தி.பெ.கமலநாதன் (மறைவு)

காமராசர் கதிர் - எழுத்தாளர் கோபண்ணா

காயிதேமில்லத் பிறை - தோழர் அ.மார்க்ஸ்

செம்மொழி ஞாயிறு - மணவை முஸ்தபா    

 ---தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கடந்த 2007ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் தொண்டாற்றி வரும் சாதனையாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். குறிப்பாக, சமூக நீதிப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலன்கள், தாய்த்தமிழ்ப் பாதுகாப்பு மற்றும் இனநலன்கள் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோரைத் தேர்வு செய்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்விழா ஆண்டுதோறும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு (2014) நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டதால் குறிப்பிட்ட நாளில் இவ்விழாவினை நடத்த இயலவில்லை. எனவே, வருகின்ற சூன் 15, 2014 அன்று சென்னையில் இவ்விழா நடைபெறுகிறது.
சென்னை, எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ள இவ்விழா, ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் அயோத்திதாசப் பண்டிதரின் நூற்றாண்டு நினைவு நாள்’ என முப்பெரும் விழாவாக ஒருங்கிணைக்கப்படுகிறது.
விழாவில் விருது பெறும் சான்றோர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணிப் பொறுப்பாளர்கள் உரையாற்றுகின்றனர்.
2014ஆம் ஆண்டுக்கான விருதுகள் பின்வருமாறு சான்றோர்களுக்கு அளிக்கப்படுகிறது:
அம்பேத்கர் சுடர் - தோழர் ஆர்.நல்லக்கண்ணு
பெரியார் ஒளி - திருவாரூர் தங்கராசு (மறைவு)
அயோத்திதாசர் ஆதவன் - தி.பெ.கமலநாதன் (மறைவு)
காமராசர் கதிர் - எழுத்தாளர் கோபண்ணா
காயிதேமில்லத் பிறை - தோழர் அ.மார்க்ஸ்
செம்மொழி ஞாயிறு - மணவை முஸ்தபா
இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகளும், தமிழ்ச் சான்றோர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி